/* */

கருணாநிதி தேர்தல் வாக்குறுதி: நூற்றாண்டில் நிறைவேற்ற கோரிக்கை..!

2016ம் ஆண்டில் கருணாநிதி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை அவரது நூற்றாண்டில் நிறைவேற்ற வேண்டும் என்று சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கருணாநிதி தேர்தல் வாக்குறுதி: நூற்றாண்டில் நிறைவேற்ற கோரிக்கை..!
X

கோப்பு படம் 

நாமக்கல், டிச. 11-

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களுக்கு, 2016ல் தேர்தல் அறிக்கையில் கருணாநிதி கொடுத்த வட்டி தள்ளுபடி தேர்தல் வாக்குறுதியை, அவரது நூற்றாண்டில் நிறைவேற்ற வேண்டும் என, தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இது குறத்து கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் வட்டி, அபராத வட்டி, தவணை தவறிய வட்டி முறைகளால் பெரும் பாதிப்பக்குள்ளாகி, மாநிலம் முழுவதும் பல்வேறு இயக்கங்களும், போராட்டங்களும் நடந்து வந்தன. இந்நிலையில, 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் வட்டி, அபராத வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்து, நிலுவை அசல் தொகையை மட்டும் செலுத்தினால் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சமூக நீதி அரசான தமிழக அரசு, தற்போது கொண்டாடி வரும் கருணாநிதி நூற்றாண்டில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்களின் வட்டி, அபாரத வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்து, நிலுவை அசல் தொகையை மட்டும் ஒரே தவணையாக கட்டி முடிக்க உத்தரவிட வேண்டும். இந்த சலுகையை, அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் வழங்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளுக்கும் இந்த சலுகையை வழங்கி, பட்டா வழங்க வேண்டும். ஜப்தி, ஏலம் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Dec 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்