/* */

நாமக்கல்லில் 21ம் தேதி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

நாமக்கல் நகரில் வருகிற 21ம் தேதி நடைபெறும், மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 21ம் தேதி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
X

நாமக்கல்லில் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான, மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் பார்வையிட்டார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

நாமக்கல் நகரில் வருகிற 21ம் தேதி நடைபெறும், மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். விழா நடைபெறும் இடத்தை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி மாலை நடைபெறும் இந்த ஆஸ்பத்திரி திறப்பு விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். பின்னர், நாமக்கல், சேலம் ரோட்டில், பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெறும், மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் பார்வையிட்டு ஆய்து செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலத்தில் வருகிற டிச.17ல், மாநில திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வரும், 21ம் தேதி, நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெறுகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபிறகு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, வருகிற 21ம் தேதி, மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மேலும் விழாவில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 14 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெறும் மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணியினர் வெள்ளை சீருடையில் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என அவர் கூறினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Nov 2023 4:51 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  2. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  3. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  4. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  5. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  6. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  8. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  9. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  10. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்