/* */

நாமக்கல் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயா சிங், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு செய்த கலெக்டர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய வசதி இல்லை. இதையொட்டி, அங்கு உள்ள கடைகளுக்கு இரும்பு தகட்டால் ஆன மேற்கூரை அமைத்தல், தரையில் பேவர் பிளாக் அமைத்தல், கழிப்பிடங்களை சீரமைத்தல், எல்இடி விளக்குள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப்பணிகள் ரூ.28.38 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்த விவசாயிகளின் அடையாள அட்டையை பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த காய்கறிகளின் தரத்தை ஆய்வு செய்தார். உழவர் சந்தைக்கு வரும் வழியில் அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற வியாபாரிகளின் கடைகளை அகற்ற அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் நாசர், விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 21 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!