/* */

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6,52,724 பேருக்கு தடுப்பூசி: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 52 ஆயிரத்து 724 பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6,52,724 பேருக்கு தடுப்பூசி: கலெக்டர்
X

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட, 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, முதல் தவணை தடுப்பூசி (81.5 சதவீதம்) 11 லட்சத்து 28 ஆயிரத்து 166 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (55.93 சதவீதம்) 7 லட்சத்து 74 ஆயிரத்து 279 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடந்த 16 மெகா தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 724 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர்.

நாளை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 17ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து கிராம பஞ்சயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்பசு காதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் உள்ள 460 நிலையான முகாம்கள் மூலமாகவும் 36 நடமாடும் குழுக்கள் மூலமாகம் ஆகமொத்தம் 496 முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!