/* */

ராசிபுரம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு..!

ராசிபுரம் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம் பகுதியில் மக்களுடன் முதல்வர்  திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு..!
X

ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற, மக்களுடன் முதல்வர் முகாமினை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் :

ராசிபுரம் பகுதியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் மாதிரி முகாமினை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மாதிரி முகாம், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, காட்டூர் ரோட்டரி கிளப் கட்டிடம் மற்றும் நாமகிரிபேட்டை பேரூராட்சி, அண்ணா வெள்ளி வார சந்தை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்தமுகாமில் 12 அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 33 திட்டங்களின் சேவைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இம்முகாமில் மின்சாரத்துறையின் சேவைகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சேவைகளான குடிநீர், கழிவு நீர் இணைப்புகள், சொத்து வரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், வர்த்தக உரிமங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்று, திடக்கழிவு மேலாண்மை தொடர்பான மனுக்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சேவைகளான, பட்டா மாறுதல், உட்பிரிவு, நிலஅளவை விண்ணப்பங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான மனுக்களையும் பொது மக்கள் வழங்கினார்கள்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சேவைகள் திட்ட ஒப்புதல், வகைப்பாடு மாற்றம், தமிழ்நாடு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உரிமை ஆவணம் வழங்க கோருதல் தொடர்பான மனுக்களையும், காவல் துறையின் சேவைகளான பொருளாதாரக் குற்றப் புகார், நில அபகரிப்பு, நில மோசடி, பிறமனுக்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகளான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பராமரிப்பு மானியம், கருவிகள், உபகரணங்கள், சுய வேலை வாய்ப்பு கடன் போன்ற வங்கி கடன்கள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் வெப்சøட் மூலம் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கூறினார்.

இம்முகாமில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் லதா, ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Nov 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!