/* */

நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Namakkal news- மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு;  நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

Namakkal news- வலையப்பட்டி பகுதியில், நீரோடையை மறைத்து சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் நாமக்கல்லில் காதில் பூ வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Namakkal news, Namakkal news today- மோகனூர் அருகே, நீரோடையை மறைத்து, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, நாமக்கல்லில் திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வலையப்பட்டி கஸ்தூரி மலையில் இருந்து மழை காலங்களில் உருவாகும் நீரோடை வலையப்பட்டி வழியாக செல்கிறது. இந்த நீரினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், நீரோடையின் குறுக்கோ கரைபோட்டான் ஆறுவரை சுமார் 18 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஏரிகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி நீரோடைகளை மறைத்து எவ்வித கட்டுமானங்களும் இருக்கக்கூடாது, அப்படி ஏதாவது இருந்தாலும், ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

இந்த நிலையில் இப்பகுதியில் சிப்காட் அமைப்பதற்கான நில வரைபடத்தில், நீரோடை மற்றும் நீர் நிலைகள் உள்ளதை மறைத்து அதிகாரிகள் அரசு அனுமதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. எனவே நீரோடைகளை மறைத்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தியும் சிப்காட் அறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வலையப்பட்டி, புதுப்பட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 May 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  3. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  4. போளூர்
    சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள்...
  5. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  6. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  7. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  9. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  10. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!