/* */

மாற்றுத்திறனாளிகளுக்கான புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு: பயன்பெற கலெக்டர் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கான புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு: பயன்பெற கலெக்டர் அழைப்பு
X

பைல் படம் 

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு புள்ளி விபரங்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத் தரவு புள்ளி விபரஙகள் பதிவு செய்யும் பணி, 2023 செப்டம்பர் துவங்கி, டிசம்பர் வரை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் சமூகத் தரவு பதிவு நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து மீதம் உள்ள, 33 மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில், 2023, டிசம்பர் 5ல் தல் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இக்கணக்கெடுப்பில், தமிழக நகர்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்க களப்பணியாளர்கள் என, தகவல் சேகரிக்கும் பணியை, 398 களப்பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இக்கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில், தகவல்கள் பதிவு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம், பல்வேறு நலத்திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மையங்கள், கோட்டம் மற்றும் வட்டார அளவில் செயல்படுத்தப்பட உள்ளன. இம்மையத்தில் பிசியோதெரபி, பேச்சுப்பயிற்சி, மறுவாழ்வு மையங்கள் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தங்கள் தகவல்களை கணக்கெடுப்பிற்கு வருகை தரும் களப்பணியாளர்களிடம், மாற்றுத்திறாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார், ரேசன், யு.டி.ஐ.டி. அட்டை, வாக்காளர் அட்டை என, 5 ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 94999 33483 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Feb 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...