/* */

கோரிக்கைளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோரிக்கைளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முழு தொகையையும் அரசு வழங்க வேண்டும். ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 3 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஏற்கனவே வழங்கிய செல்போன்கள் பழுதாகியுள்ளதால், அனைவருக்கும் புதிய செல்போன்கள் வழங்க வேண்டும். திட்டபணிகளைத் தவிர மற்ற பணிகள் வழங்கக் கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் முருகேசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். காந்திமதி, ஜெயமணி, குர்ஷித், அம்பிகா, ஜமுனா, சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செயலாளர் பிரேமா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். திரளான அங்கன்வாடிஊழியர்கள் மற்றும் உதவியார்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 26 Sep 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...