/* */

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி வைப்பு

எர்ணாபுரம் பகுதியில் ரூ.91.27 லட்சம் மதிப்பில், புதிய திட்டப்பணிகளை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி வைப்பு
X

எர்ணாபுரம் பகுதியில் ரூ.91.27 மதிப்பில் புதிய திட்டப்பணிகளை ராஜ்சபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

எர்ணாபுரம் பகுதியில் ரூ.91.27 லட்சம் மதிப்பில், புதிய திட்டப்பணிகளை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15-வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் அலுவலக அறை, வட்டார சுகாதார அலுவலர் அறை, கம்ப்யூட்டர் அறை, லேபாராட்டரி, நோயாளிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றை உள்ளடக்கிய, வட்டார பொதுசுகாதார அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி, ராஜ்சபா எம்.பி தெகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.52 லட்சம் மதிப்பில். செங்கோடம்பாளையம் அருந்ததியர் காலனியில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி, மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஆரோக்யா நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி, ஆர்.ஜி.எஸ்.பி திட்டத்தின் கீழ் ரூ.23.75 லட்சம் மதிப்பில் மாரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து புதிய அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி ஆகிய 4 பணிகள் மொத்தம் ரூ.91.27 லட்சம் மதிப்பில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், பிடிஓ அருளாளன், உதவி செயற்பொறியாளர் கணேச பெருமாள், பஞ்சாயத்து தலைவர்கள் மாரப்பன், நலங்கிள்ளி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!