/* */

பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது

Coimbatore News- பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் செயயப்பட்டது. தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
X

Coimbatore News- கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் பல கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில், ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் தாத்தூர் பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது சகப்தீன் (50) மற்றும் ஆரிப் ராஜா (20) என்பதும், இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரியவந்தது. மேலும் பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, கோவையில் இறங்கி இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வருவதும், பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 8.400 கிலோ கஞ்சா மற்றும் 3.100 கஞ்சா சாக்லெட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முகமது சகாப்தின் மீது க.க. சாவடி பகுதியில் 7 கிலோ கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்த வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 May 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு