10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

Namakkal news- 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் தங்கவேல் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
Namakkal news, Namakkal news today- நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் பரமத்தி ரோட்டில் காவேட்டிப்பட்டியில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரவீனா ராகவி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவி விஸ்மிதா 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றுள்ளார். பள்ளி மாணவர் அஸ்வின் 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 4ஆம் இடம் பெற்றுள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை குறிஞ்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu