/* */

காவேரிப்பட்டிணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், இன்று காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ்பையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் 400 ஆண்டுகள் பழமையானது. இரண்டு அங்குல உயரமே உள்ள இந்த விநாயகர், இரண்டு கைகளை மட்டுமே கொண்டுள்ளார்.

தலையின் உச்சியில் குடை செறுகுவதற்கான துளையும் உள்ளது. துதிக்கை வலம்புரியாக உள்ளது. குழந்தை போல் அமர்ந்துள்ளார். அடிப்பகுதி குழிவாக உள்ளது. விநாயகர் சிற்பங்கள் பொதுவாக கல் அல்லது உலோகத்திலேயே அதிகம் காணப்படும். சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. 400 ஆண்டுகள் பழமையான இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இந்த விநாயகர் சிலையை தற்போது கோவிந்தராஜ் குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, வரலாற்றுக்குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஆசிரியர் ரவி, தொல்லியல் ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Updated On: 11 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...