/* */

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
X

கரூரில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் நேரில் பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.

டெல்டா பாசனத்திற்காக நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றிலிருந்து பாசன வசதி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

அப்போது அவர் செய்தியாளரிடம் பேசுகையில் நிகழாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது இதையொட்டி பாசனத்திற்கான அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன

இதில் கரூர் மாவட்டத்தில் 10 பணிகள் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பாசன வாய்க்கால்கள் மற்றும் 6 வடிகால் 60 கிலோ மீட்டருக்கு வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றனஇந்த பணிகள் மூலம் 9 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார்.

Updated On: 5 Jun 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி