/* */

கரூரில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எரியும் குப்பைக் கிடங்கு

குப்பைக் கிடங்கில் 12 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கரூரில்  12 மணி நேரத்துக்கும்  மேலாக எரியும் குப்பைக் கிடங்கு
X

கரூர் குப்பை கிடங்கில் 12 மணி நேரமாக எரியும் தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.

கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான பகுதியில் பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் தீயை அணைக்க முயற்சி எடுத்தனர்.

தொடர்ந்து தீ அதிக அளவில் எரிந்ததால் உடனடியாக கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 7 மணியில் இருந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். கரூர் நகராட்சிக்கு சொந்தமான லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு தீயை அணைக்க பெரும் முயற்சி எடுப்பதால் ஓரளவுக்கு தீ கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தொடர்ந்து புகை அதிக அளவில் வெளியேறுவதால் கரூர்-வாங்கல் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்