/* */

கரூர் காகித ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 150 படுக்கைகள்

கரூர், தமிழ்நாடு காகித ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகள் வசதிக்காக 150 படுக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் காகித ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 150 படுக்கைகள்
X

கரூர் காகித ஆலை வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மற்றும் ஆலை உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில். கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் உள்ளன.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கை வசதிகள் இன்னும் ஒரு வார காலத்துக்குள் அமைக்கப்பட உள்ளன. சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை அமைத்து வரும் இரும்பாலை பொறியாளர்கள் இந்த 150 படுக்கை வசதிகளையும் அமைக்கின்றனர். இன்னும் ஒரு வார காலத்திற்குள் இவை அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் தலா ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக வரும் 25ஆம் தேதி கரூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வசதிகள் தொடங்கப்படும் தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால சலுகைகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.

Updated On: 17 May 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்