/* */

குடும்ப‌அட்டைகளுக்கு வழங்க இலவச வேட்டி சேலை தயார்

நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

குடும்ப‌அட்டைகளுக்கு வழங்க இலவச வேட்டி சேலை தயார்
X

 காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சார்பில் வழங்கபடவுள்ள இலவச வேட்டி சேலைகள்..

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த பொங்கல் திருநாளுக்கான வேட்டி சேலைகள் சோளிங்கர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடை மூலம் வழங்கப்படும்.

உற்பத்தி செய்யப்பட்ட இலவச வேட்டி சேலைகள் தமிழகம் முழுதும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தற்போது அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோளிங்கர் பகுதியில் உள்ள நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மையத்தில் இருந்து நெய்யப்பட்ட வேட்டி , சேலைகள் வந்துள்ளது இது விரைவில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

Updated On: 8 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!