/* */

பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி துணை மேலாளர் கைது

ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் ஐ சி ஐ சி ஐ வங்கியின் துணை மேலாளர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி துணை மேலாளர் கைது
X

இரு வேறு தனிநபர் கணக்குகளில் இருந்து ரூபாய் 45 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் தனியார் வங்கி துணை மேலாளர் விஜய்.

உரிய அனுமதியின்றி இரு வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி துணை மேலாளர் விஜய்யை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் துணை மேலாளராக விஜய் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள ராகா பிளாட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவர் மேற்கண்ட நபர் விஜயிடம் ரூபாய் 30 லட்சம் கொடுத்து நிரந்தர வைப்பு நிதியில் செலுத்தி விடுமாறு அளித்துள்ளார்.

ஆனால் துணை மேலாளராக பணிபுரிந்த விஜய் அந்த பணத்தை தனது நண்பர் ஆனந்த் செல்வராஜ் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இது தொடர்பாக ஐ சி ஐ சி ஐ வங்கியின் மண்டல மேலாளர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் விஜய் மற்றும் ஆனந்த் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த ஜானகி ராமன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரில், ஒரகடம் ஐசிஐசி ஐ வங்கியில் தான் கணக்கு வைத்திருந்ததாகவும் அப்போது பணிபுரிந்த துணை மேலாளர் விஜய் நன்கு பழக்கம் ஏற்பட்டு வங்கி பரிவர்த்தனைக்கு உதவி வந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய், கணக்கு வங்கியில் தவறான பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய 15 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் மறுநாள் அதை திருப்பித் தருவதாக கூறி தனது நண்பர் தினேஷ் என்பவர் பெயரில் காசோலையாக பெற்றுள்ளார்.

இது மட்டும் இல்லாது ஜானகிராமனின் வைப்பு நிதி மற்றும் தொழிற்சாலை வைப்பு நிதியிலிருந்து போலிப்பரிவர்த்தனை மூலம் 56 லட்சத்தை எடுத்தது தெரிய வந்து அது குறித்து வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்த போது அதனை திருப்பி அளித்துள்ளதாகவும், ஆனால் ரூபாய் 15 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

இப் புகாரினை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மாவட்ட காவல் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலைக்கு பரிந்துரை செய்து , அதன் பேரில் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இரு வழக்குகளிலும் ஒரே குற்றவாளி என்பதால் தனியார் வங்கி துணை மேலாளர் விஜய் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் பரிவர்த்தனைக்கு உதவிய அவரது நண்பர்கள் தினேஷ் மற்றும் ஆனந்த் செல்வராஜ் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 13 March 2024 10:57 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...