ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!

ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
X

சன் ஹாலிவுட் சேனல் (கோப்பு படம்)

தற்போது ஹாலிவுட் திரைப்படங்களை பார்ப்பதற்காகவே ஒரு புதிய சேனல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவி குழுமத்தில் தமிழில் மட்டும் சன் டிவி, சன் நியூஸ், சன் மூவிஸ், ஆதித்யா உள்பட ஒரு சில சேனல்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான சேனல்களை வைத்துள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஹாலிவுட் படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு புதிய சேனல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹாலிவுட் படங்களை தமிழில் பார்ப்பதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், குறிப்பாக இளைஞர்கள் இருக்கும் நிலையில் அவர்களை கவர்வதற்காகவே இந்த சேனல் என்றும் ‘சன் ஹாலிவுட்’ என்ற சேனலை விரைவில் தொடங்க இருப்பதாகவும் 24 மணி நேரமும் இதில் ஹாலிவுட் படங்களை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான முயற்சியில் சன் குழுமம் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் ஹாலிவுட் படங்களை உரிமம் வைத்திருக்கும் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த சேனல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story