/* */

கோவையில் மகளை கொலை செய்து தாய் தற்கொலை

ஜோசியம் பார்த்த போது தனக்கு கை கால் சரியில்லாமல் போய்விடும் என கூறியுள்ளார்.

HIGHLIGHTS

கோவையில் மகளை கொலை செய்து தாய் தற்கொலை
X

தனலட்சுமி.

கோவை மாவட்டம் துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி(58). இவருக்கு சுகன்யா (30)என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும், சசிக்குமார் என்ற மகனும் உள்ளனர். சசிக்குமார் திருமணமாகி சரவணம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனலட்சுமி சசிக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜோசியம் பார்த்த போது தனக்கு கை கால் சரியில்லாமல் போய்விடும் என கூறியுள்ளார். மேலும் மனமுடைந்து பேசிய தனலட்சுமி நானும் சுகன்யாவும் இருப்பது உனக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் எனக்கும் ஜோசியத்தில் சொன்னது போல் நடந்து விட்டால் எங்களை பார்த்து கொள்ள யாரும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். சசிக்குமார் அவ்வாறெல்லாம் ஒன்றும் ஆகாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சசிக்குமார் அம்மாவை பார்க்க செல்லலாம் என எண்ணி வீட்டிற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது அவரது அம்மா செல்போனை எடுக்காததால் அவரது பக்கத்து வீட்டுகாரருக்கு போன் செய்து வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா என பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக சசிக்குமாருக்கு இந்த தகவலை கூறியுள்ளார். சசிக்குமார் வந்து பார்க்கையில் தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையிலும் சுகன்யா வாயில் நுரை தள்ளியபடியும் இருந்துள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுகன்யா விஷம் அருந்தி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டதில் தனலட்சுமி சுகன்யாவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’