/* */

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக வளாகத்தில் திடீர்  தீ விபத்து
X

கோவை மாநகராட்சி மத்திய மண்டபல பழைய கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து  ஏற்பட்டது.

கோவை பந்தய சாலை பகுதியில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தின் அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் சுகாதார பிரிவுக்கான பிளிச்சிங் பவுடர் , பினாயில், ஆசிட் உட்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்படும் அறையும் உள்ளது. மேலும் அந்த கட்டிடத்தில் பல்வேறு ஆவணங்களும் வைக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அந்த கட்டிட்டத்தில் .இன்று திடீரென தீ பிடித்தது.

பழைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ காரணமாக கடும் நெடியுடன் புகை வெளியேறியது. அந்த அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்.

இந்த தீ விபத்தில் பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் , ஆவணங்கள் எரிந்து சேதமானது. கடும் நெடியுடன் புகை வெளியேறியதால் பொதுமக்கள் சிறிது நேரம் சுவாசிக்க சிரமப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Aug 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்