/* */

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை

மாதந்தோறும் உதவித் தொகை ரூ.3000 பெற ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

HIGHLIGHTS

விளையாட்டு வீரர்களுக்கு  ஓய்வூதிய  உதவித்தொகை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப்பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2019- - 2020ஆம் ஆண்டிற்கு ஓய்வூதிய உதவித் தொகை மாதம் ரூ.3000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

தகுதிகள்: குறைந்தபட்ச தகுதி

அ) தேசீய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பு.

ஆ) இப்போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியான விளையாட்டுப்போட்டிகள் - மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசீய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசீய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசீய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசீய அளவிலான விளையாட்டுப்போட்டிகள்.

சர்வதேச போட்டிகளாயின் குறைந்தபட்சம் ஆறு நாடுகள் பங்கேற்றிருக்க வேண்டும். இளவயதில் பங்கேற்று வெற்றிபெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 2021 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000 -(ரூ ஆறாயிரம் மட்டும்)க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மைய மாநில அரசின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான ((veteran/masters sports meet)) விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. அழைப்பு நினைவு ஓபன் போன்ற போட்டிகள் இளைஞர் திருவிழா இளைஞர் பரிமாற்றம் போன்ற நிகழ்வுகளில் நடத்தப்படும் போட்டிகள் தகுதியில்லை. தகுதிப்போட்டியின்றி நேரடியாக தேசீய மற்றும் பன்னாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்ட போட்டிகள் தகுதியில்லை.

முக்கிய தேதிகள் மற்றும் நேரம் - இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் -19.5.2021- மாலை 5.00 மணி மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், அரியலூர் அவர்களை 7401703499 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 7 May 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  2. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  3. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  4. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  5. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  6. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  7. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  8. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...