மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!

மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த  பயணிகள்..!
X

அரசு  சிட்டி பஸ்களில் மழைநீர் இருக்கைகளில் ஒழுகி கிடைப்பதால் உட்கார முடியாமல் நிற்கும் பயணிகள். 

அரசு போக்குவரத்து பேருந்துக்குள் பயணம் செய்ய முடியாமல் பயணிகள் பேருந்துக்குள் பெய்த மழையில் நனைந்தபடி பயணம் செய்தனர்.

மதுரை:

மதுரையில் பலத்த மழையில் அரசு பேருந்துக்குள் குற்றால அருவி போல மழை நீர் பயணிகள் தலைமீது கொட்டியது. 'குற்றால அருவியிலே குளித்ததுபோல இருக்குது' என்று பயணிகள் பாட்டு பாடாத குறை ஒன்றுதான் பாக்கி. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.

பகல் பொழுது வெப்பம் ஏற்பட்டாலும், அதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில், மாலை நேரங்களில் குளிர்ந்த மழை பெய்து வருகிறது. மதுரை நகர், சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம், மேலூர், கல்லுப்பட்டி, வரிசூர், பூவந்தி, கொடைரோடு, அம்மைய நாயக்கனூர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் தினசரி மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், சாலையோரம் மரங்கள் சாலையில் சாய்கின்றன. மதுரை நகரில் மாநகராட்சியில் தோண்டப்பட்ட குழிகளில் ,மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.


மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு ஆகிய தெருக்களில் மழை நீர் குளம் போல, தேங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்வதற்கு அஞ்சுகின்றனர்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மழை நீரை தேங்கியுள்ளதை அகற்ற அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது. மாநகராட்சி மேயர், ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால், திருவேடகம் பகுதியில் மரங்கள் சாய்ந்தன. மழை பெய்துவரும் இந்த சூழ்நிலையில் அரசு பேருந்தில் பயணிகள் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பேருந்துக்குள் மழை அருவிபோல் கொட்டுகிறது. பேருந்துகளை சரிவர பராமரிப்பு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தனியார் பேருந்துகள் எப்படி பராமரிப்பு செய்யப்படுகிறது.

அதைப்போல அரசு பேருந்துகளும் பராமரிப்பு செய்யப்படவேண்டும். தான் பணியாளர்கள் இருந்தும் எதனால் பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். மண்டல மேலாளர்கள் அரசு பேருந்துகளை கவனித்து பராமரிப்பு பணிகளை முடுக்கிவிடவேண்டும் என்கிறார்கள் பயணிகள்.

Tags

Next Story
லேப்டாப் பேட்டரி எப்படி பாதுகாக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க | how to check battery health in laptop