/* */

ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு

ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு
X

ஆசிய தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம்  பெற்ற  விளையாட்டு வீரர் கார்த்திகேயனுக்கு,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பாராட்டு தெரிவித்தார்.

21-வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டு போட்டிகள்-2024ல் கலந்துகொண்டு 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவன் எஸ்.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பல கோடி ரூபாய் நிதி உதவிக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கே அமைக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் தங்கள் பிரிவுகள் சார்ந்த மைதானங்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 21-வது ஆசிய இளைஞர் தடகள விளையாட்டு போட்டிகள்-2024 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாயில் மார்ச் 24 இருந்து 27 வரை நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் சங்கரா கலைக் கல்லூரியில் பிகாம் 2-ம் வருடம் படிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் என்ற மாணவன் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று 3 – ம் இடத்தினை வென்று வெண்கலம் பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

காஞ்சிபுரம் திரும்பிய விளையாட்டு வீரருக்கு , காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டுகளும் தெரிவித்து , மற்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் சாதனை புரிந்த ஓட்டப்பந்தய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

மேலும் மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கார்த்திகேயன் செயல்பட்டு உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்வினை எடுத்துரைக்கபட்டது.

இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் தடகள வீரர் கார்த்திகேயன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீடியோ காட்சிகள் மற்றும் பதக்கம் பெற்ற காட்சியை காண்பித்தார்.

ஆட்சியர் காட்சிகளைப் பார்த்து விளையாட்டு வீரர் கார்த்திகேயனுக்கு சிறப்பு பரிசு வழங்கி அவருக்கு மென்மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தேவையான பயிற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 7 May 2024 11:48 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...