ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம்

ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மே.16) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், சீமைக்கருவேல் மரங்களை முழுவதும் அகற்றிட முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 14 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அவ்வூராட்சிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை முழுவதும் அனைத்து துறையினரும் இணைந்து அகற்றிட வேண்டும். சீமைக்கருவேல் மரங்களை அகற்றிட சமூக தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்திட வேண்டும். மேலும், சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்படும் இடங்களில் புதியதாக மரக்கன்றுகளை நட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், மாவட்ட வன அலுவலர் (ஈரோடு) குமிலி வெங்கட அப்பால நாயுடு, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், துணை இயக்குநர் (வேளாண்மை, உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story