/* */

மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு உபகரணங்கள்

பெரியபாளையம் அருகே மாற்றம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு உபகரணங்கள்
X

மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம் அருகே வடமதுரை செங்காத்தகுலம் கிராமத்தில் பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி விளையாட்டு உபகரணங்கள் மாற்றம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர், மேலும் இந்தப் பழங்குடியின மக்களின் குழந்தைகள் அங்குள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை வளர்க்கும் விதமாக மாற்றம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் திரைப்பட நடிகருமான ராகவா லாரன்ஸ், மற்றும் கேபிஒய் பாலாஅவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் பகுதி சார்ந்தஇந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஆனந்தன்,அப்பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களான நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனா, மற்றும் விளையாட்டு உபகரங்களான பேட்,ஸ்டெம்ப், பால் போன்றவற்றினை வழங்கினார்.

இதனையடுத்துஅங்குள்ள குழந்தைகளுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஆனந்தன், கிரிக்கெட் விளையாடி மகிழ்வித்தனர். நிகழ்வின் போது சமூக சேவகர் மோகன், மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 May 2024 10:50 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...