/* */

அமெரிக்கா, லண்டனுக்கு பறக்கும் விருதுநகர் தள்ளுவண்டி ஸ்வீட்

விருதுநகரில் 30 வருட பாரம்பரிய தனசக்தி தள்ளுவண்டி ஸ்வீட் கடை ஸ்வீட்கள் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பறக்கிறது.

HIGHLIGHTS

அமெரிக்கா, லண்டனுக்கு பறக்கும் விருதுநகர் தள்ளுவண்டி ஸ்வீட்
X

விருதுநகர் தள்ளுவண்டி ஸ்வீட் கடை.

விருதுநகரில் அமெரிக்கா, லண்டனுக்கு ஸ்வீட்கள் ஏற்றுமதி செய்யும் தள்ளுவண்டி ஸ்வீட் கடை.

விறு விறு விற்பனையில் ஈடுபட்டுள்ள 30 வருட பாரம்பரிய தனசக்தி தள்ளுவண்டி ஸ்வீட் கடையில் எப்போதும் கூட்டம் இருப்பது வழக்கம்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைதான் இந்த தனசக்தி தள்ளுவண்டி ஸ்வீட் கடை. கிராம மக்கள், நகர மக்கள் என பாகுபாடின்றி முந்தியடித்துக்கொண்டு ஸ்வீட், பலகாரங்கள் வாங்கி செல்கின்றனர். நமது பாரம்பரிய இனிப்பு வகைகளான லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, அல்வா, பால்கோவா உள்ளிட்ட நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் சுடச்சுட தயாரித்து விற்பனையாகி வருகிறது. சுடச்சுட தயாரித்து கொடுப்பதே இந்த தள்ளுவண்டி கடையின் சிறப்பு. தள்ளுவண்டி கடை என்பதால் அன்றன்று இனிப்பு வகைகள் தயாரித்து விற்பது இதன் சிறப்பு ஆகும்.


மேலும் ரோட்டோரத்தில் தள்ளுவண்டி நிறுத்தி பலகாரங்கள் விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு எளிதாகவும் உள்ளது. மேலும் பேருந்து நிலையம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தள்ளுவண்டி நிறுத்தி விற்பனை செய்வதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகின்றது என்கிறார் உரிமையாளர் சக்திவேல்.


இந்நிலையில் தீபாவளிக்கு நிறைய ஆர்டர்கள் குவிந்தது. இதனால் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வகைகளான லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, அல்வா, பால்கோவா உள்ளிட்ட நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் தயாரித்தது வழங்கினோம். தீபாவளி ஆர்டர் என்பதால் ஸ்பெஷலாக பல கூடுதல் மூலப்பொருட்கள் சேர்த்து சுவை கூடுதலாக கிடைக்கும் வண்ணம் தயாரித்து டெலிவரி செய்தோம் என்கிறார், தயாரிப்பாளர் தனலட்சுமி. இந்த தள்ளுவண்டி ஸ்வீட் கடையில் தயாரிக்கப்படும் ஸ்வீட்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், அமெரிக்கா, லண்டன் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது சுவையான சுவாரசியமான செய்தியாகும்.

சுவை இருந்தா எங்கே இருந்தாலும் மக்கள் தேடி வந்து வாங்குவாங்க. அது உண்மை தானேங்க..விருதுநகர் பக்கம் போனால், தள்ளுவண்டி ஸ்வீட் கடையை மறக்காதீங்க.

Updated On: 5 Nov 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி