/* */

வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம்

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பயிற்சி முகாம்
X

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றபயிற்சி முகாமில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள்.

அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயா, ராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை), வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் மாதசம்பளத்தில் வருமான வரியை கணக்கிட்டு மாதசம்பளத்தில் பிடித்தம் செய்வது, அந்த தொகையை உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கில் சேர்ப்பது, தனிப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருமான வரி படிவத்தை உரிய காலக்கெடுக்குள் தாக்கல் செய்வது உள்ளிட்ட கடமைகள், பொறுப்புகள் குறித்தும்,

வருமானவரி படிவம் தாக்கல் செய்யாத போது எதிர்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும், விரிவாகவும், துறை அலுவலர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர். மேலும் வருமானவரி இணையதளத்தில் வருமான வரி படிவம் தாக்கல் செய்வது, பிடித்தங்களை சரிபார்ப்பது தொடர்பான நேரடியான செயல் விளக்கங்களை மாவட்ட கருவூல கண்காணிப்பாளர்கள் செய்து காட்டினர்.

இதில் 200-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர். பயிற்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 Aug 2022 12:55 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு