பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு
X

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஆனி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்ததையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஆனி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது.

சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த நாள் என்றும் பெருமாளை வணங்கி வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றப்படுகிறது. அதனால்தான் மற்ற நாட்களை விட சனிக்கிழமைகளில், திருப்பதி முதலான பெருமாள் குடிகொண்டிருக்கும் கோவில்களில் வழக்கத்தை விட மக்கள் குவிகிறார்கள். சனிக்கிழமைகளில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் துளசி தீர்த்தம் பருகுவதும் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், குடும்பத்தில் ஏதேனும் வேண்டுதல் செய்பவர்கள், அதாவது குடும்பத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் அல்லது பதினொரு ரூபாய் முடிந்து வைப்பார்கள். பெருமாளை மனதில் நினைத்து, சனிக்கிழமைகளில் வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து பிரார்த்திக்கிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஆனி மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆனி மாத முதல் ஞாயிற்றையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. இதே போல் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story