பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர் மீது நடவடிக்கை

பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர் மீது நடவடிக்கை
X

Erode news- சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோக் காட்சி படங்கள்.

Erode news- பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

Erode news, Erode news today- பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் புதிய நிலையத்தில் கோபிக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்தில் ஏறிய முதியவரை, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் முதியவரை கீழே இறக்கி தள்ளி விட்டனர். இந்த சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10ம் தேதி சனிக்கிழமை காலை சுமார் 10.45 மணி அளவில் திருப்பூரிலிருந்து கோபிக்கு செல்லும் வழித்தடப் பேருந்தில் ஓட்டுநராக முருகன், நடத்துநராக தங்கராசு, பணிபுரிந்தனர். பேருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 10.45 மணிக்கு கோபி வருவதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

அப்போது, பேருந்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியின் மீது அப்பேருந்தில் மது போதையில் இருந்த ஆண் பயணி தகாத முறையில் நடக்க முற்பட்டதால் அப்பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அப்பெண்பயணியை அவரிடமிருந்து காப்பாற்ற பேருந்துவில் இருந்து இறக்கிவிட முற்பட்ட போது குடிபோதையில் இருந்த பயணி இறங்க மறுத்த காரணத்தினால் வழுக்கட்டாயமாக இறக்கிவிடும் போது நடத்துநர் அவரை தள்ளி விட்டதால் மதுபோதையில் இருந்து பயணி கீழே விழுந்துவிட்டார்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் மதுபோதையில் இருந்த பயணியிடமிருந்து பெண் பயணியை காப்பாற்ற முற்பட்டாலும், குடிபோதையில் இருந்த ஆண் பயணியை தள்ளிவிட்டது குற்றச்செயலாகும் அதனால் அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
காளான் சாப்பிட்டாலே உடம்புல என்னென்ன மாற்றம் நிகழும் தெரியுமா....?