ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி வருகை தரும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருவதாக கூறப்பட்ட நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து பிரதமர் மோடி தேசிய ஜனநாய கூட்டணியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், பீகாரின் நிதிஷ் குமார், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் மோடி பிரதமர் ஆக ஆதரவு அளித்து இருந்தது. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்கு பயணம் சென்றார். இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியது. சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும், மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பது உள்ளிட்ட ரயில்வே சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu