குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க. நிர்வாகிகள்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய   பா.ஜ.க., தி.மு.க. நிர்வாகிகள்

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த பாஜக மற்றும் திமுக நிர்வாகிகள்.

பா.ஜ.க., தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க.விற்கு தாவிய நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வாழ்த்து தெரிவித்தார்.

பா.ஜ.க., தி.மு.க. விலிருந்து அ.தி.மு.க.விற்கு தாவிய நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்கள் பிடித்து வெற்றி பெற்று தற்போது மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், அதிருப்தியாளர்கள் பலரும், தாங்கள் சார்ந்த கட்சியினை விட்டு வேறு ஒரு கட்சிக்கு மாறி வருகிறார்கள். இதன்படி குமாரபாளையம் பகுதியில் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவரும், தட்டான்குட்டை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் கதிரேசன், பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் ஜீவா, பா.ஜ.க. பள்ளிபாளையம் ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஷ்குமார், தட்டான்குட்டை 14வது வார்டு, தி.மு.க. உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகிய நால்வரும் தங்கள் கட்சியை விட்டு விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இவர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன், தட்டான்குட்டை ஊராட்சி துணை தலைவர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story