திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா

திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
X

திருச்சி அருகே மரம் நடும் விழா நடைபெற்றது.

திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது.

தண்ணீர் அமைப்பு, திருச்சி வாழும் கலை பயிற்சி மையம், மற்றும் முத்து நகர் குடியிருப்போர் நல சங்கம் இணைந்து திருச்சி அருகே சீராத்தோப்பு முத்துநகர் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

நிகழ்வில் பணி நிறை பெற்ற காவல் துறை அலுவலர் ஏடிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் வனச்சரக அலுவலர் கோபிநாத் ஆகியோர் தலைமையேற்று மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தனர்.

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் சதீஷ் குமார் மற்றும் இணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா, முருகேசன், சஞ்சய், சரவணன் , வயலூர் கணேசன், ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் நாவல், புங்கன், மகிழம், இலுப்பை, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வை திருச்சி வாழும் கலை அமைப்பின் பயிற்சியாளரும், தண்ணீர் அமைப்பு நிர்வாகிருமான செல்வம் ஒருங்கிணைத்தார்.நிகழ்வில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

வாழும் கலை அமைப்பு, தண்ணீர் அமைப்பு, மற்றும் முத்துநகர் நல சங்கம் உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare