/* */

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல், திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்களை வழங்கிய மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் தொடக்கத்திலேயே 105 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. எனவே வெயிலில் பொதுமக்கள் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க திமுக சார்பில் நீர்மோர் குடிநீர் பந்தல்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ.வேலு கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, ஆரணி ,செங்கம், போளூர், செய்யாறு, உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் உள்வட்ட கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் குடிநீர் பந்தல்கள் திமுக சார்பில் திறக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் சிலை அருகில் மற்றும் நகர திமுக சார்பில் அறிவொளி பூங்கா, காந்தி நகர் பைபாஸ் சாலை, திருவள்ளுவர் சாலை, காந்தி சிலை, அண்ணா சிலை ஆகிய இடங்களிலும், அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் அண்ணாமலையார் கோயில் எதிரே, மற்றும் பேருந்து நிலையம் என திருவண்ணாமலை நகரில் 9 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் பணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், நீர்மோர், இளநீர், நுங்கு ,வெள்ளரி பிஞ்சு, வாழைப்பழம், குளிர்பானம், தர்பூசணி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார் .

இந்த நீர் மோர் பந்தல் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் காலை 9 மணிக்கு திறக்கப்படும் நீர் மோர் பந்தல் மாலை 6:00 மணி வரை தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.

மாவட்ட திமுக இளைஞரணி

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் நேரு, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராம்காந்த் , தினேஷ் பாபு, நகர மன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள் ,ஒன்றிய செயலாளர் ,கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2024 2:13 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!