/* */

திருவண்ணாமலை: நகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு நடத்தினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: நகராட்சி குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய அமைச்சர் ஆய்வு
X

திருவண்ணாமலை நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை நகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ஈசான்ய மயானம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்திருக்கிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில், ஆயிரக்கணக்கான டன் குப்பைக் கழிவுகள் மலைபோல குவிந்திருக்கிறது.மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக் கழிவுகளுடன் பல ஆண்டுகளாக குப்பை குவிந்திருப்பதால், அப்பகுதியை சுற்றிலும் சுகாதார சீர்கேடு மிகுந்து காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் குப்பை கழிவுகள் சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. வெயில் காலங்களில் சமூக விரோதிகள் குப்பைக் கிடங்குக்கு தீ வைப்பதால், நச்சுப்புகை வெளியேறி மக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த கோடை காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்த அவல நிலை இருந்தது. அதனால், அந்த பகுதியில் குடியிருப்போர் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும், கிரிவலப்பாதைக்கு அருகிலும், அஷ்டலிங்க சன்னதிகளில் நிறைவு சன்னதியான ஈசான்ய லிங்க சன்னதிக்கு அருகிலும் குப்பைக் கிடங்கு அமைந்திருப்பதால் கிரிவல பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாயுடுமங்கலம் அடுத்த அகரம் சிப்பந்தி பகுதிக்கு குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி நடந்தது.ஆனால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, குப்பைக் கிடங்குக்கு மாற்று இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கலும், குழப்பமும் நீடித்தது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை, காஞ்சி சாலையில் புனல்காடு பகுதிக்கு மாற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதையொட்டி, நகராட்சி குப்பைக் கிடங்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குப்பை கிடங்கு அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு, குவிந்துள்ள குப்பைகளை எவ்வாறு அகற்றுவது, அதற்கான கால அவகாசம், குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு பகுதியில் உத்தேசமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குப்பைக் கிடங்குக்கான மாற்று இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அந்த பகுதியில் குப்பைகிடங்கு அமைப்பதால், பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Nov 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை