ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?

ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூனிசூப்பர் நிறுவனம் 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி தரவுகள் தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூனிசூப்பர் நிறுவனத்தின் 125 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி) இருப்பு கொண்ட கணக்குகள், கூகுள் கிளவுட்டில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட விவகாரத்தில் யூனிசூப்பர் மற்றும் கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களின் வருடாந்திர ஓய்வூதிய சேமிப்பு கணக்கை அணுக முடியாத நிலை ஏற்படுட்டுள்ளது. தரவுகளை, ஏற்கெனவே மற்றொரு இடத்தில் சேமித்து வைத்துள்ள யூனிசூப்பர்- விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யூனிசூப்பர் நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் சுன் மற்றும் கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு எனவும் இதனால் மோசமான சேவையை எதிர்கொண்ட உறுப்பினர்களிடம் மன்னிப்பைக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொடங்கி அழிக்கப்பட்ட தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அழிக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story