/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்தரமேரூர் , வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலான சாரல் மழை பெய்து வருகிறது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
X

உத்திரமேரூர் பகுதியில் சாரல் மழையுடன் கூடிய இரு வானவில் தோன்றிய காட்சி.

உத்திரமேரூரில் அதிகாலை முதல் மேகமூட்டங்களுடன் லேசான தூறல் மழை பெய்து வந்த நிலையில் வானில் தோன்றிய அழகிய வானவில்லை வாகன ஓட்டிகள் ரசித்து சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே கடும் வெப்பம் தாக்கியாதல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். சில நேரங்களில் வெப்ப அலை அதிகளவில் பதிவாகி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயங்களையும் ஏற்படுத்தியது. .

இந்நிலைகளை தவிர்த்திட பொதுமக்கள் அதிகளவு நீர் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பே சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

அவ்வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கோடை மழை சில நாட்களாக பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கன மழை பெய்து பொதுமக்களுக்கு கத்திரி வெப்ப தாக்கத்திலிருந்து சற்று நிம்மதி அளிக்கும் வகையில் குளிர் காற்றுடன் மழை பெய்தது. நேற்று முற்றிலும் மழை இல்லாத நிலையில் மிதமான வெப்பம் மட்டுமே நிலவியதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே வானம் மே மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் உத்திரமேரூரில் எல். எண்டத்தூர் நெடுச்சாலையில் வானில் அழகிய இரண்டு வானவில் தோன்றியது.அதில், ஒன்று மேகமூட்டங்களுக்கு இடையே மறைந்த நிலையில் மற்றொரு வானவில் பளிச் சென்று தெரிந்து. அதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்தபடி சென்றனர்.

தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு உள்ள நிலையில் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

Updated On: 16 May 2024 4:00 AM GMT

Related News

Latest News

 1. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 2. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 3. கோவை மாநகர்
  மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
 4. வீடியோ
  🔴 LIVE : அந்த நடிகர் யாருன்னே தெரியாது! எல் முருகன் பத்திரிக்கையாளர்...
 5. திருவண்ணாமலை
  ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்: கூடுதல் ரயில்கள் இயக்க பக்தர்கள்...
 6. உலகம்
  வங்கதேச விடுதலை: ஹிட்லரால் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத...
 7. வீடியோ
  NIA அலுவலகத்திற்கு வந்த போன் கால்! | தீவிரமாகும் புலன் விசாரனை...
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்
 9. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 10. ஈரோடு
  வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர்...