/* */

திருவண்ணாமலையில் மின்துறை பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு

தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மின்துறை பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு
X

மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு 

தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் எல்லப்பன் வரவேற்று பேசினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜுபிடர் ரவி, ரமேஷ் குட்டி, சந்திரசேகரன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் உழைக்கும் மக்களை கடுமையாக பாதித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசும் மின் வாரியமும் மின்சார ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 3 Jan 2022 3:03 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்