/* */

திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முகேஷ் உத்தரவு.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
X

வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறை, மகளிர் திட்டம், உயர் கல்வி, மருத்துவ பணிகள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை, காவல் துறை , செய்தி மக்கள் தொடர்பு துறை, அரசு போக்குவரத்துக் கழகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு கேபிள் நிறுவனம், ஆவின் பாலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அருணை பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

அந்தந்தத் துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை எவ்வித சுணக்கமும் இன்றி செய்து முடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு சோதனை மேற்கொள்ள வேண்டும். 108 அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி , மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?