திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்களை ஏற்றி செல்லும் தனியார் பள்ளி வாகனங்களை தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (14.05.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்து தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது:-

பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆய்வுக் குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின் போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும்.

பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண் காவல் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் அவசர நேரத்தில் அந்த கதவை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து விளக்கத்தை பயன்படுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். வாகனத்தில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும், மேலும் வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் தெளிவாக தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தில் பொருத்த வேண்டும்.

ஓட்டுநர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை ஓட்டுநர்கள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. எனவே ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்பு முறை குறித்து மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி எவ்வாறு அளிக்கப்படவேண்டும் என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழு மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முதற்கட்டமாக இன்று (14.05.2024) 147 பள்ளிகளைச் சோ;ந்த 663 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 596 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 67 வாகனங்களில் சில குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்து மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகம்மது மீரான், செந்தில்குமார், செந்தில் சுப்ரமணியன், பிரபாகர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சாரதி மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளா;கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?