/* */

சுதந்திர தின விழா அமுதப்பெருவிழா: பா.ஜ.க.வினர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம்

திருவண்ணாமலை பாஜக சார்பில் சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

சுதந்திர தின விழா அமுதப்பெருவிழா: பா.ஜ.க.வினர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம்
X

மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் கிஷோர் குமார் கடைகளுக்கு சென்று தேசிய கொடியினை வழங்கினார்கள்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. ஓ.பி.சி. அணி சார்பில் தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு, விஜயன், தர்மன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மாலதி வரவேற்றார். திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம், கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு வழியாக சென்று காமராஜ் சிலையை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் சென்றவர்கள் வந்தே மாதரம் என்று கோஷங்கள் எழுப்பிய படி சென்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஓ.பி.சி. அணி தலைவர் சாய்சுரேஷ், பொது செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் அணி துணைத் தலைவர் கிஷோர் குமார் , தலைமையில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று தேசியக் கொடியினை வழங்கினார்கள்.

Updated On: 14 Aug 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது