/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டு

கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டு
X

தி.மலையில் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. அருகில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர். 

திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண் வேட்பாளர்கள், கர்ப்பிணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேர்தலுக்கு பிறகு பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து, பாஜக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசும்போது, "பாஜக பெண் வேட்பாளர் மற்றும் கர்ப்பிணி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுகவினர் பார்க்கின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களே, காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள். பாஜகவினர் சாதுவாக உள்ளனர். இதே நிலை நீடித்தால், பாஜகவினர் மீது கை வைக்கப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கர்ப்பிணி தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினரை கைது செய்ய வேண்டும்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியானது ஜனநாய கத்துக்கு கிடைத்த தோல்வி. மத்திய அரசின் திட்டங்களில், தி.மலை மாவட்டத்தில்தான் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. அடுத்து சிபிஐ நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் ஊழலை அதிமுக தட்டிக் கேட்காமல் பாஜகவினர் தட்டி கேட்பதால், அவர்களுக்கு கோபம் வருகிறது. திமுகவின் அநீதியை பாஜக தட்டி கேட்கும்" என்றார். இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்