/* */

மகாகவியின் இல்லம் நினைவகமாக மாற்றியது திமுக ஆட்சியில் தான்: அமைச்சர் பெருமிதம்

எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் இல்லத்தை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று அமைச்சர் வேலு கூறினார்.

HIGHLIGHTS

மகாகவியின் இல்லம் நினைவகமாக மாற்றியது திமுக ஆட்சியில் தான்: அமைச்சர் பெருமிதம்
X

குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் “பாரதியும் திரை இசை பரதமும்” நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் "பாரதியும் திரை இசை பரதமும்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதியார் கவிதைகளை கொண்டு திரையில் வந்த பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும் தெருக்கூத்து நடனம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பரத நாட்டியம் மற்றும் தெருக்கூத்து நடனத்தை கண்டு ரசித்தார்.

தொடர்ந்து அவர் பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கும், தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் அவா் பேசியதாவது:

பாரதியாரை பொதுமக்கள் வர கவி, மகா கவி, தேசிய கவி என்று பல்வேறு பட்டப் பெயா்களில் அழைக்கின்றனா். பழைமையும், புதுமையும் கலந்து மக்களுக்குப் பிடித்ததை பாடக்கூடியவா் என்பதால் பாரதியாரை மக்கள் கவிஞா் என்று முன்னாள் முதல்வா் அண்ணா பாராட்டினாா்.

1973-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடு நினைவகமாக மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் குறும்படங்களாகவும், நாடகங்களாகவும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பாரதியாா் ஒரு தீா்க்கதரிசி. பின்னால் நடக்கப் போவதை முன்பே கணிக்கும் திறமை கொண்டவா். இவா் வாழ்ந்த காலத்தில் திரை இசை என்று ஒன்றும் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இசை அமைப்பாளர்கள் மெட்டு, ரிதம் அமைத்து கொடுத்தால் தான் பாடல் வரிகள் எழுத முடிகிறது. அவருடைய படைப்புகள் எல்லாம் இப்போது அனைத்து வடிவ இசைகளுக்கும் பொருத்தமாக உள்ளது.

மேலும் அவருக்கு ஆன்மிகத்தின் மீது பற்று இருந்ததால் பராசக்தி, கண்ணன் வைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். முதன்முதலில் புகழ்பெற்ற நாடக கலைஞர் கிட்டப்பா என்பவர் தான் பாரதியாரின் பாடலை நாடகத்தில் பயன்படுத்தினார். அதன் பின்னர் மெய்யப்ப செட்டியார் 1931-ம் ஆண்டு பாரதியாரின் பாடல்களை திரைப்படங்களுக்கு பயன்படுத்த உரிமை பெற்றார்.

பாரதியாரின் புகழ் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் தற்போது தமிழக முதல்-அமைச்சர் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமின்றி பாரதியாரின் நினைவு நாளை மகாகவி நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார். பாரதியாரின் படைப்புகள் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் அம்பேத்குமாா், சரவணன், ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், தமிழ்நாடு திரைப்படப் பிரிவு தலைமை தயாரிப்பாளா் ரவி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளா் மற்றும் சமூகப் பாதுகாப்பு வாரிய உறுப்பினா் ஸ்ரீதரன், அருணை மருத்துவக்கல்லூரி முதல்வர் குணசிங், மருத்துவ கண்காணிப்பாளர் குப்புராஜ்,கார்த்திவேல்மாறன், பிரியாவிஜயரங்கன் உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2023 1:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க