/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி
X

திருவண்ணாமலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, திருவண்ணாமலை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஷீஜாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகளின் நலனை பாதுகாத்திட ஊட்டசத்து உணவு முறைகள் குறித்து மக்களுக்கு விளக்கும் முறை, ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், சுகாதார ஊட்டச்சத்து தினம் நடத்துதல் போன்ற பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சரண்யா, மரியம்மாள், ஆயூஸ் மருத்துவமனை டாக்டர் புனிதவதி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதிராமஜெயம், ஊராட்சி குழு கவுன்சிலர்கள் இல.சரவணன், ஆரஞ்சி ஆறுமுகம், செந்தில், முத்துமாறன் உள்பட கவுன்சிலர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 April 2022 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!