/* */

தமிழக அரசின் சிறந்த விவசாயி ஆக வேண்டுமா? இதோ அந்த வழிமுறைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வேளாண்மை இயந்திரம் கண்டுபிடிக்கும் விவசாயிக்கு ஒரு லட்சம் பரிசு என வேளாண் இணை இயக்குநர் அறிவிப்பு.

HIGHLIGHTS

தமிழக அரசின் சிறந்த விவசாயி ஆக வேண்டுமா? இதோ அந்த வழிமுறைகள்
X

பைல் படம்.

புதிய விவசாய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2020- 21 ம் ஆண்டு மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும் புதிய இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை, அல்லது துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீது உடன் விண்ணப்ப படிவத்தினை இணைத்து வேளாண்மை உதவி இயக்குனர் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழு களால் தேர்வு செய்யப்பட்டு பிறகு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பிறகு விண்ணப்பங்கள் மாநில குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்பிருக்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும். மார்ச் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்த தகவல்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 March 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  7. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  8. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  9. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  10. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை