காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!

காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
X

பெரிய கோட்டை கிராமத்தில் கோடைநெல் சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியால் அதிக அளவு நிலத்தடி நீ ர் உறிஞ்சப்படுவதால் மற்றும் பயிரின் மூலம் அதிக நீராவியாவதும் நடைபெறுவதால் கடல் நீர் உள் புகுந்து பாசனநீரின் தன்மை மாறுபட்டு இளம் பயிர்களில் அதிக அளவு

பாசியின் தாக்குதல் காணப்படுகிறது.

காலநிலைக்கு ஏற்ப பயிர்பாதுகாப்பு குறித்து மதுக்கூர் வேளாண் உதவு இயக்குனர் வானிலை ஆய்வுமைய காலநிலை அறிவிப்புக்கு ஏற்ப வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்.

நெல் உளுந்து பயிர்களில் தற்போது நிலவும் வெப்பநிலை காற்றின் வேகம் பெறப்போகும் மழை குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை அடிப்படையில் உரமிடுதல் களைக்கொல்லி தெளித்தல் மற்றும் பயிர் பாதுகாப்பு பணிகளை சூழலறிந்து விவசாயிகள் திட்டமிட வேண்டும். வேளாண் மதுக்கூர் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரம்

”14.05.2024 முதல் 17.05.2024 வரை, அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 20 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது”

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

14.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.05.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி. திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2024; தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை. லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, இருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.05.2024 மற்றும் 19.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-

14.05.2024 முதல் 17.05.2024 வரை, அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 20 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14.05.2024 முதல் 15.05.2024 வரை: அடுத்த 2 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், பொதுவாக இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரிரு இடங்களில் 38'-40' செல்சியஸ், இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-38° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

16.05.2024 & 17.05.2024: புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பு நிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.

உள் அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-38 செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ் இருக்கக்கூடும்

ஈரப்பதம்

14.05.2024 முதல் 17.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும் மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60 85% ஆகவும் இருக்கக்கூடும்.

வானிலை நிலவரத்துக்கு ஏற்ப பின்பற்றவேண்டிய நெறிமுறைகள்

மேற்கண்ட தினசரி வானிலை அறிவிப்புக்கு தக்கவாறு இளம் பயிர்களுக்கு குறைவான அளவு நீரும்

வளர்ச்சி அடைந்த பயிர்களுக்கு நீர் பாசனத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வேண்டும். காற்றின் வேகத்துக்கு தக்கவாறு திசைக்கு தக்கவாறு இலை வழி உரம் மற்றும் பூச்சிகள் கட்டுப்பாடு மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பு பணிகளை காற்றடிக்கும் திசையில் மேற்கொள்ள வேண்டும்.

காற்றின் வேகம் அதிகம் இருந்தால் தெளிப்பு பணியை நிறுத்தி விடுதல் நலமாகும். அதிக கரையும் திறன் கொண்ட உரங்கள் மற்றும் மருந்துகள் தெளிப்பதை அதிகம் மழை பெறும் என்ற முன்னறிவிப்பு சூழல்களில் தவிர்த்து விடுதல் சிறப்பாகும்.

அதிக வெப்பநிலை காற்றில் கரியமில வாழ்வின் அளவை அதிகரித்து உளுந்து போன்ற பயிர்களின் அதிக தழை வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் பூக்கள் பூக்கும் அளவை குறைத்து மகரந்தமும் காய்ந்து விடுவதால் காய்ப்புத் தன்மையும் குறையும் .

காலை 7 மணியிலிருந்து பதினோரு மணி வரையிலான அதிக வெப்பநிலை நெல்லில் பூக்களின் மகரந்த சேர்க்கையினை பாதிக்கும். மாம்பழம் போன்றவைகளில் பழங்களின் நெகிழ்வான தாக மாறுவதோடு இனிப்பு தன்மையும் குறைந்து விடும்.

எலுமிச்சை குடும்பங்களில் பழங்களின் அமில தன்மையும் அதிகரிக்கும் . கீரைவகைகளில் அதிக வெப்பநிலை ஏற்படுத்தும் உயிர்வேதியல் மாற்றங்களால் சுவை மற்றும் சத்துகளின் அளவில் மாற்றம் ஏற்படுத்தும்.

எனவே, விவசாயிகள் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளையும் தினசரி வேளாண் சார்ந்த வானிலை அறிக்கைகளை அறிந்து அதற்கு ஏற்ப திட்டமிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை அணுகி ஆலோசனை பெற கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil