/* */

காந்தி ஜெயந்தியை யொட்டி நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு

Grama Sabha in Tamil -திருவண்ணாமலை மாவட்டம் வரகூா் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தியை யொட்டி நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு
X

வரகூா் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது

Grama Sabha in Tamil -திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வரகூா் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமை வகித்தாா். மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், வேளாண்துறை இணை இயக்குநா் பாலா, செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆயிரம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்கள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றல் கற்பித்தல் திறன் அதிகரித்துள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, வேளாண்துறை மூலம் 2 பேருக்கு தென்னங்கன்றுகள், 2 பேருக்கு பாரம்பரிய நெல் விதைகள், ஒருவருக்கு நுண்ணூட்டக் கலவை நெல், வருவாய்த் துறை மூலம் 4 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 2 பேருக்கு திருமண உதவித்தொகை, 6 பேருக்கு ஆதரவற்ற உதவித்தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி, கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத் தலைவா் பரிமளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாதேவன், நிா்மலா, வரகூா் ஊராட்சித் தலைவா் தனக்கோட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

சலசலப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பகுத்தறிவு மாமது, துணைத்தலைவர் சசிகலாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின் விளக்கு எரியவில்லை. கால்வாய் சுத்தம் செய்வது, குப்பைகள் அதிகமாக உள்ளதை அகற்றுதல், குடிதண்ணீர் அதிக நேரம் விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை கூறினர்.

ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 5 பணித்தள பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டனர். ஆனால், அதில் 2 பேருக்கு மட்டும் மீண்டும் வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற்ற 3 பேரும் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து எங்களை நீக்க காரணம் என்ன, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆகையால் மீண்டும் வேலை தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடித்துள்ளனர்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி அண்டம்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டார். துணை சபாநாயகர் அவர்கள் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆரணியை அடுத்த காமக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் ஆரணி சந்தவாசல் சாலையில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது.மீண்டும் நினைவூட்டல் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இதன்படி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!