/* */

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது

திருவண்ணாமலை அருகே காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது
X

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராம காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுப்பன்றி வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், பிரகாஷ், ரமேஷ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காட்டுப் பன்றி இறைச்சியை பறிமுதல் செய்து மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். தப்பிச்சென்ற மேலும் இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!