வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்ற தாய் மற்றும் மகன்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8 ம் தேதிவரை நடந்து முடிந்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியானது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 15,917 மாணவா்கள், 15,017 மாணவிகள் என மொத்தம் 30,934 போ் எழுதினா்.
அதில், 24936 மாணவர்கள், 13,698 மாணவிகள் உட்பட மொத்தம் 26,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 86.10 சதவீத தேர்ச்சியாகும் .
திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 36- ஆவது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள் 81.27 சதவீதமும், மாணவிகள் 91.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமே அதிகரித்திருக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில், அம்மாவும், மகனும் சேர்ந்தே 10 ம் வகுப்பு எழுதியிருக்கிறார்கள்.. இதில் தாயும் - மகனும் இருவருமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி செய்யாற்றை அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவர் செய்யாற்றில் உள்ள ஒரு மளிகை கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி நித்தியா செய்யாற்றை அடுத்த கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்ட தற்காலிக சமையலராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மகன் சந்தோஷ் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நித்தியாவிற்கும் அரசு வேலைக்காகவும் மற்றும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தானும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத முடிவு செய்தார். இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக தனித் தேர்வு ஆக விண்ணப்பித்தார். மேலும் பத்தாம் வகுப்பு தேர்விற்காக வந்ததாசியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்றார்
காலையில் தொடக்கப்பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு பயிற்சி மையத்துக்கு சென்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான பாடங்களை படித்து வந்தார். மாலை வேலைகளில் தனது மகன் சேர்த்து படிப்பாராம்.
இந்நிலையில் நித்யாவும் அவரது மகன் சந்தோஷம் தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில் நித்யா 274 மதிப்பெண்களின் அவரது மகன் சந்தோஷம் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும் மகனும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
தாயையும் மகனையும் அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து மேலும் மேற்படிப்புகள் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu