ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர்
வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,சாதி,மதங்களைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என் உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.
திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
வந்தவாசியில் ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திர விழா
ஸ்ரீராமானுஜரின் 1007 வது திரு நக்ஷத்ர உற்சவ விழா நேற்று நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களிலும் வைணவ பெருமக்களாலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் 1007- ஆவது திருநட்சத்திர விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீகைங்கா்யம் அமைப்பு சாா்பில் ஸ்ரீராமானுஜரின் மூலவா் திருமேனிக்கு இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் பல்வேறு திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திர விழா, சனிக்கிழமை சிறப்புகள் பூஜை நடைபெற்றது..
பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திர விழா , மற்றும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாளுக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது.
மேலும் பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu