வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம்

வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம்
X

வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கமளித்த தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் 

வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் விளக்கமளித்தனர்.

தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் வாழை தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசன நோயை கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் வாழை தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதலை ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து மைதா கரைசலை பயன்படுத்தி கரும் பூசன நோயை கட்டுப்படுத்துதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்கள்.

இந்நிகழ்வில் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மீன் அமிலம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் மீன் அமிலம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

கல்லூரியைச் சோ்ந்த மாணவா் குழுவினா் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி பெற பொன்னூா் கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.

அப்போது, மீன் அமிலம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு அவா்கள் பயிற்சி அளித்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

மீனின் குடல்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தூள் வெல்லத்தை அதனுடன் சோ்த்து, அதனை பரந்த வாய்ப் பகுதி கொண்ட கண்ணாடி குடுவை அல்லது பிளாஸ்டிக் ஜாடியில் போட்டு இறுக மூடி காற்று புகாதவாறு வைக்க வேண்டும்.

தண்ணீா் சோ்க்க கூடாது. 30 நாள்களில் நொதித்து விடும். நைலான் வலை பயன்படுத்தி அதனை வடிகட்டினால் சுமாா் 500 மில்லி அளவுக்கு தேன் போன்ற திரவம் கிடைக்கும். இந்த மீன் அமிலத்தை ஒரு லிட்டா் தண்ணீரில் 5 மில்லி கலந்து தெளிக்கலாம். இது தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக அமையும். குறைந்தபட்சம் 5 கிலோ மீன், 5 கிலோ வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மீன் அமிலம் தயாரிக்க வேண்டும். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் விவசாயிகள் இந்த மீன் அமிலத்தை பயன்படுத்துகின்றனா் என்றனா். இந்நிகழ்வில் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி